காங்கிரஸ் முன்னாள் எம்பி வள்ளல்பெருமான் காலமானார்

286 0

சிதம்பரம் தொகுதியில் 3 முறை எம்பியாக பணியாற்றிய டாக்டர் வள்ளல்பெருமான்(69) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் வள்ளல்பெருமான், 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதி எம்பியாக 3 முறை பணியாற்றியவர்.

2001-ல் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மனைவி சரளாவும் டாக்டராவார். ஷிவ்மோகா என்ற மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார். சிதம்பரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a comment