ஆவாவைச் சேர்ந்த மேலும் மேலும் மூவர் கைது!

Posted by - November 30, 2017

ஆவாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கைது பொலிஸார் தெரிவிப்பு ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் மறைந்திருந்த மூவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே நேற்றிரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது

சீரற்ற காலநிலை காரணமாக அதிக பாதிப்பு!

Posted by - November 30, 2017

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், வீதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகவும் தெரவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வரையில் பல வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளை சீரமைப்பதற்கான அரசாங்கத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள்

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு

Posted by - November 30, 2017

அடையாறு, அசோக் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்!

Posted by - November 30, 2017

வதந்திகளை நம்ப வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுனாமி ஏற்பட்ட கூடும் என வதந்திகள் பரவி வருகின்றமை தொடர்பில் அவர் எ இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய காலி, மாத்தறை, ஹம்பாந்தொடை, இரத்தினபுரி, நுவரெலிய, பதுள்ளை, மொனராகல மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கு இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கோர்ட்டில் நீதிபதி கண்முன்னே விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட முன்னாள் ராணுவ தளபதி

Posted by - November 30, 2017

போஸ்னியா ராணுவத்தின் முன்னாள் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சர்வதேச கோர்ட்டில் நீதிபதி கண் முன்னரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

Posted by - November 30, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் விசேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார். பாதீடு மற்றும் தற்போதைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து அவர் விசேட அறிவிப்பை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது

பெரகல பிரதேசத்தில் மண் சரிவு!

Posted by - November 30, 2017

பெரகல பிரதேச,  பதுளை – கொழும்பு வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, புகையிரத சேவைகள் பாதிப்பு (காணொளி)

Posted by - November 30, 2017

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில், நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பாரிய மண்சரிவுகளும், கற்களும் புரண்டு விழுந்துள்ளதன் காரணமாக, மலையக புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் புகையிரதம், ஒஹிய புகையிரத நிலையத்தில் தரித்துள்ளதுடன், பாதிப்பேற்பட்டுள்ள புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின்

மணல் குவாரிகள் மூடப்பட்டால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்

Posted by - November 30, 2017

ஐகோர்ட்டு உத்தரவால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கூறினார்.

கனேடிய அரசு இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்- கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை(காணொளி)

Posted by - November 30, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரகூக்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னனிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன், யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களைத்