லண்டன் மேயர் சாதிக் கான் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா பயணம்!
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் பிரிட்டனில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் மேயர் சாதிக் கான் இன்று இந்தியா வருகை தர உள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் பிரிட்டனில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் மேயர் சாதிக் கான் இன்று இந்தியா வருகை தர உள்ளார்.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை மத்திய வேளாண் அமைச்சகம் கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வருகிற 7-ந் தேதி முதல் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்த தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்வதாக தெரியவருகிறது. அத்துடன் ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதிச் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உக்கிரமடையவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவதானமாக இருந்துகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் தீவுகளில் தற்போதைக்கு தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அத்தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் உக்கிரமடைந்து மத்திய வங்காள விரிகுடாவினூடாக இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அத்தாழமுக்கம்
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (03) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களத்தில் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை)
யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட 3 பென்டன்களுடன் 2 கிராம சேவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.