மஹிந்த நாளை பதுளைக்கு விஜயம்.!

Posted by - December 3, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு  நடைபெறும் கட்சியின் பதுளை மாவட்ட ஆரம்பப் பொதுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி  சிறப்புரையாற்றுவார். இக்கூட்டத்தை  முன்னிட்டு பதுளை நகர்  வர்ணங்களிலான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதியின் படங்களைத் தாங்கிய பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இக்கூட்டத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் பலரும், ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்த பலரும், மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் இணையவுள்ளனர். குறிப்பாக ஊவா மாகாணசபை

மனோ கணேசன் மல்வத்து பீடத்தில்.!

Posted by - December 3, 2017

சகவாழ்வு, தேசிய  நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப் பெருக்கு, தேர்தல் எல்லை நிர்ணயம், மத்திய வங்கி பிணைமுறி மோசடி,  அமைச்சர்களின் ஊழல் என்று புதிய புதிய பிரச்சினைகளை முன்வைத்து அதிகமான ஊடகங்கள் தேசிய நலன்களை அடகு வைக்கும் கைங்கரியத்தை செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை.!

Posted by - December 3, 2017

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் தமது அணியிரனுக்கும் தனக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் அதிகரித்து தருமாறு அவர் தரப்பின் கோரிக்கை

தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை

Posted by - December 3, 2017

சீரற்ற காலநிலையின் காரணமாக 4 மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை நடைபெறவுள்ளன. அடைமழை மற்றும் கடும் காற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெறவிருந்த மூன்றாம் தவணை பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறும். திங்கட்கிழமைக்கான நேரசூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமுலாக்கப்படும் என மேல்மாகாண தமிழ்க்கல்விப் பணிப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது. மத்திய மாகாண பாடசாலைகளிலும் வியாழக்கிழமைக்குரிய பரீட்சைகள்

வடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி – ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை

Posted by - December 3, 2017

வடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலியாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.

ஜமாத் உத் தவா அடுத்த ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடுகிறது: ஹபீஸ் சயீத் திட்டம்

Posted by - December 3, 2017

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.3.26 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி

Posted by - December 3, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தண்டையார் பேட்டையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, காரில் கொண்டு வரப்பட்ட ரூ.3.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிடவேண்டும்!

Posted by - December 3, 2017

நடுக்கடலில் உயிருக்காக போராடி வரும் மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் நாளை கன்னியாகுமரி வருகை!

Posted by - December 3, 2017

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை வருகை தர உள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் நோயாளியின் வயிற்றில் இருந்து 72 நாணயங்கள் அகற்றப்பட்டன

Posted by - December 3, 2017

மராட்டிய மாநிலத்தில் நோயாளியின் வயிற்றுக்குள் இருந்த 72 நாணயங்களை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.