ஜமாத் உத் தவா அடுத்த ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடுகிறது: ஹபீஸ் சயீத் திட்டம்

347 0

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவனான ஹபீஸ் சயீத், இப்போது ஜமாத் உத் தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறான். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதிச்செயலில் ஈடுபட்ட இவனை, தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்த்து, இவனது தலைக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் பரிசுத்தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு கொடுத்த நெருக்கடியால், பாகிஸ்தான் அரசு அவனை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான். ஆனால், ஹபீஸ் சயீத் மீது குற்றப் பின்னணி எதுவும் இல்லை எனக்கூறி லாகூர் கோர்ட்டு அவனை விடுதலை செய்தது.

இதற்கிடையே ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் அவனை மீண்டும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஹபீஸ் சயீத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, ஜமாத் உத் தவா அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் ஹபீஸ் சயீத் பேசுகையில், மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சி உருவாக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீர் விடுதலைக்காக தனது கட்சியும் ஆதரவாளர்களும் தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment