69 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 29, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவிக்க யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் அவர்கள் 69 பேரையும் தாய் நாட்டுக்கு திருப்பியனுப்ப யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறதென அதிகாரிகள்

சுமந்திரன், மனோ போன்று எங்களுக்கும் அதிரடிப்படை பாதுகாப்பு வேண்டும் – திகாம்பரம், ஹக்கீம்

Posted by - December 28, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது போன்று தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றி புதிய அரசாங்கத்திற்கான அத்திவாரம்- நிமல்

Posted by - December 28, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான ஓர் அத்திவாரமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ அன்றி முழு நாட்டுக்கும் சவால்

எனது வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பது தெரியாது- சிறிசேன

Posted by - December 28, 2017

பவத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். என்னுடைய வாளுக்கு வெட்டுப்படுவது எனது குடும்ப உறவினர்களா?  நண்பர்களா? எனக்கு  நெருக்கமானவர்களா?  யார் என்பது எனக்குத் தெரியாது. யாரானாலும் வெட்டுப்பட்டுச் செல்வார்கள் என பகவத்

மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம்

Posted by - December 28, 2017

ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், மஸ்கெலியா நகரில் இன்று (28) நடைபெற்றது. இதற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், பிரவுண்ஸ்வீக், ஹப்புகஸ்தென்ன, கங்கேவத்த, லக்கம் ஆகிய பாடசாலைகளின் தமிழ் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தலும் இடம்பெற்றது. தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மஸ்கெலியா

இலங்கை வருகிறார் யப்பான் வெளிவிவகார அமைச்சர்

Posted by - December 28, 2017

யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ , ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில்

உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 66 ஆவது இடத்தில் சிறிலங்கா!

Posted by - December 28, 2017

உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

Posted by - December 28, 2017

வெளியான கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது

Posted by - December 28, 2017

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் பிள்ளையும் காலி பொலிஸ் மோசடி தடுப்பி பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.