ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் தான் எடுக்கப்பட்டதா? – சந்தேகம் எழுப்பும் ஆனந்தராஜ்

Posted by - December 29, 2017

ஜெயலலிதா சிகிச்சை பெறுவதுபோன்று வெளியிடப்பட்ட வீடியோவில் சந்தேகம் உள்ளதாகவும், அந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறியவேண்டும் என்றும் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தி உள்ளார்.

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - December 29, 2017

தமிழக மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சாகல தேரர் காவியுடையைக் கலைய வேண்டும்- அமைச்சர் பாலித பகிரங்க சவால்

Posted by - December 29, 2017

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாதவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இதுதவிர, புக்குளம் கடற்ழெலில் அமைப்பொன்றும் அமைச்சருக்கும் பொது மக்களுக்கும் எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடு பொய்யானது எனத் தெரிவித்து முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக வனாதவில்லு பொலிஸார் நேற்று (28) குறிப்பிட்டுள்ளனர். தாம் சூழல் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிரூபிக்க முடியுமாயின் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாகவும்

வெற்றிலை, கை சின்ன வேட்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு

Posted by - December 29, 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் இன்று (29) கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளின் போதும் செயற்படும் முறைமைகள் தொடர்பில் இதன்போது இவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஸ்ரீ ல.சு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.ம.சு.மு. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பன நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில்  341 சபைகளுக்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

Posted by - December 29, 2017

அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வருடத்தில் இடம்பெற்றுள்ள விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏற்பட்டவையாகும். கடந்த ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக மாத்திரம்

க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறு – மாணவன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 29, 2017

உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததன் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மாணவன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நண்பர்களை விட அதிக பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக அவர் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாகவும், மாலை நேரம் குறித்த மாணவனின் அறையில் அழுகுரல் கேட்டதையடுத்து அறைக்கு சென்று பார்த்த போது மாணவன் வாந்தி

அம்பலாங்கொட கடலில் முதலை

Posted by - December 29, 2017

அம்பலாங்கொட, உஸ்முதுன்லெவ பிரதேச கடலுக்கு இன்று காலை முதல் முதலை ஒன்று வந்திருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹிக்கடுவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அகுரல கலப்பில் இருந்து இந்த முதலை கடலுக்கு வந்திருப்பதாகவும், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதால் முதலையை பிடிப்பதில் சிரமம் நிலவுவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அத தெரண செய்தியாளரிடம் கூறியுள்ளார். கடல் பகுதியில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ள

முதலாம் தவணைக்காக 2ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Posted by - December 29, 2017

2018ஆம் ஆண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும் 58 பாடசாலைகள் ஜனவரி மாதம் 13ஆம் திகதி​ வரை மூடப்பட்டிருக்கும் நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட குறித்த 58 பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேயிலை தடைக்கும், அஸ்பெஸ்டஸ் தடைக்கும் தொடர்பில்லை – ரஷ்யா

Posted by - December 29, 2017

இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கு இலங்கை விதித்த தடைக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி மரேரி தெரிவித்துள்ளார். “இலங்கையின் தேயிலைப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு கப்ரா வண்டு அல்ல. அது ஒரு எரிமலைக் குழம்பு. இலங்கை தேயிலைக்கு தற்காலிக தடையை விதித்தமைக்குக் காரணம், எமது நாட்டின் கோதுமை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளைப் பாதுகாக்கவேயாகும். அண்மையில் மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அரச

வடக்கில் கன்னிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - December 29, 2017

வடக்கு பகுதியில் கன்னி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 90 மில்லியன் ரூபா வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானின் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு வடமாகாணத்தில் கன்னிவெடி அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மீள்குடியேறும் மக்களுக்கு பாதுகாப்பான பிரதேசத்தை வழங்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பை வழங்க முடியும் என ஜப்பான் அரசு