13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 7, 2017

மன்னார் பாக்கு நீர் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில்  வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12.10.2017, அன்று ஐந்து இந்திய மீனவர்களும் 17.12.2017 அன்று எட்டு இந்திய மீனவர்களுமாக 13 இந்திய மீனவர்கள் இரு இந்திய இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு

கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு

Posted by - December 7, 2017

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன.மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை மேற்கொண்டது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரை அண்டிய

சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு அபராதம்

Posted by - December 7, 2017

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - December 7, 2017

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெறவுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கு 6 பாடங்கள்-அகில விராஜ்

Posted by - December 7, 2017

எதிர்வரும் காலங்களில் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் 6 பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகின் வெற்றிகரமான கல்வி முறை ஃபின்லாந்து நாட்டில் காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், குறித்த முறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம் நாட்டின் மாணவர்களது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை

பங்களாதேஷ் ‘பிஜோய்’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - December 7, 2017

சிநேகபூர்வ சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் நாட்டின் ‘பிஜோய்’ கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கேற்ப இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இலங்கையின் பங்களாதேஷிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் சயிட் மக்சுமல் கலந்து கொண்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள குறித்த கப்பலின் அதிகாரிகள் நாட்டில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, குறித்த கப்பலின்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – கடற்படை தளபதி சந்திப்பு

Posted by - December 7, 2017

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரயிஸ் ஹச்ஸன் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஜேஸன் சேர்ஸ் உம் கலந்து கொண்டார். சந்திப்பின் இறுதியில் இரு தரப்பினரிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

சில புகையிரத சேவைகள் இரத்து

Posted by - December 7, 2017

புகையிரத சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று சில புகையிரத சேவைகளை ரத்து செய்ய நேர்ந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இருப்பினும் அலுவலக ஊழியர்களின் நலன்கருதி சில புகையிரத சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று காலை தெரிவித்தார். இதேவேளை, புகையிரத வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் பயணிகளின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து சபை சார்ந்த சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் விடுமுறைகள்

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Posted by - December 7, 2017

வாசிப்பு ஆற்றல் மிக்க பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டு பயண வாய்ப்புக்களை பெற்றுத் தரப் போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வாசிப்பு ரசனையை மென்மேலும் மேம்படுத்தி, சர்வதேச மட்டத்தில் கூடுதல் அறிவு படைத்தவர்களாக மாணவர்கள் திகழ வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கல்வியமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள மூவாயிரத்து 312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்து, பாடசாலைகளுக்கு

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - December 7, 2017

புத்தளம், குதிரை மலைக்கு கிழக்காக உள்ள கடற்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 5 தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 283 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.