மலையக விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்பாட்டுக்குழு- மனோ
மலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற் பாட்டுக்குழுவொன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் அடுத்த இரண்டுவாரங்களில் கூடுகின்றபோது மலையக ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தும் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக் குழுக்களின் அறிக்கைகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து

