Breaking News
Home / தமிழீழம் (page 10)

தமிழீழம்

மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில்  புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை …

Read More »

மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்த யானைக் கூட்டம்!

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மக்கள் வாழ்விடப்  பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த யானைக் கூட்டம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்தமைநினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. நெடுங்கேணியின் ஓடைவெளிக் கிராமத்தின்  மக்கள் வாழ்விடப்பகுதிக்குள் அதிகாலையில் புகுந்த யாணைகள் மக்களின் வாழ்வாதாரத் தொழிலான பப்பாசிச் செய்கையினை அழித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 360ற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 3 விவசாயிகளிற்கு சொந்தமான நிலப்பில் இருந்த …

Read More »

தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 10மணிக்கு வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. 

Read More »

சிறுவன் கடத்தல் முயற்சியா? – செல்வச்சந்திதியில் நேற்று பரபரப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.

Read More »

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இன்று மாவட்டசெயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக  வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய வசதிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Read More »

தொடர் கன மழையினால் வான் பாயும் வழுக்கியாறு! மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியினை சூழவுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலை நீடிக்குமாக இருந்தால் தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், …

Read More »

மாங்குளத்தில் தனிநபர் பெருமளவு அரச காணியை அடாத்தாக பிடிப்பதாக மக்கள் சந்தேகம்

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்தாகப் பிடித்து வேலி அமைக்க முடியும் எனவும் இக்காணி கூட …

Read More »

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும்.  யாழ்ப்பாண மாநகர சபைக்கு தேர்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவால்  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

வன்னி விழிப்புலனற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு

வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர் சங்கத்தினை சேர்ந்த 88 பேருக்க்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் இவ்வுதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு  மத்தியில்  வாழ்ந்து வரும் வன்னியில் உள்ள விழிப்புனர்வு அற்ற 88 பேருக்கு  தொடர்ச்சியாக இவ்வுதவி வழங்கப்படவுள்ளது. வன்னி விழிபுலனற்றோா் சங்கத்தின் …

Read More »

மட்டக்களப்பில் 36 பேர் கைது

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று  இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை  இடம்பெற்றுள்ளது.  இதில்  மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com