திருகோணமலை மாவட்டம், மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு வெருகல் பிரதேசம்

76 0

மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் வெருகல் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 150 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் கலாச்சார மண்டபத்தில் 19/11/2025 இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்ரது.
மாவீர்ர்களின் பெற்றோர் இசை வாத்தியங்களுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றல் பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு பிரதேச மக்கள் ஒன்றுதிரன்டு உணவு சமைத்து பரிமாறி சிறப்பித்தனர்.அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்,சட்டத்தரணிகள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.