வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்..

7 0

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றையதினம்(13) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் உடல் ரீதியாக மிக இயலாத நிலையிலேயே வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நல நிலை குறித்து மேலதிக தகவல்கள் பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக கடந்த நவம்பர் 28 ஆம் திகதி எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவு செய்யப்பட்டார். சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் இந்தப் பதவியை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.