நல்லூரில் வெள்ளம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு யாழ் நூலக கேட்பார் கூட மண்டபத்தில் இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற உள்ளது.
நாட்டில் ஏற்பட்ட தீவிர வானிலை, டித்வா புயலினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் இந்த செயலமர்வு நடாத்தப்பட உள்ளது.
இந்த செயலமர்வில் நல்லூர் பிரதேசமும் அதன் வெள்ள நிலைமையும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.
மேலும், குறித்த கருத்தரங்கானது நாடக அளிக்கையுடன் ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண விஞ்ஞான சங்க தலைவர் வைத்திய கலாநிதி பே.அ.டினேஸ் கூஞ்ஞ தெரிவித்துள்ளார்.

