Breaking News
Home / செய்திகள் (page 20)

செய்திகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை-சிறிசேன

தை பிறந்தால் வழி பிறக்கும்´ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை ஆகும்.  அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உலக வாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான புனித தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.  பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் மிகச் சரியாக பாதுகாத்து வழங்கும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் புனித தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் …

Read More »

ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகிறது-ரணில்

இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  தைத்திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த சூரிய பகவானை வணங்கி, அதற்குப் பங்களிப்புச் செய்த மாடுகள் உட்பட முழு இயற்கைக்கும் …

Read More »

7 மாகாணங்களில் அமோக வெற்றி பெறுவோம் – ரோஹித அபேகுணவர்தன

வடக்கு   மற்றும்  கிழக்கு   மாகாணங்களில் இனியொரு  போதும்   தமிழ்   தேசிய   கூட்டமைப்பினர்    மக்களின்  ஆதரவினை பெற முடியாது. இடம்பெறவுள்ள    மாகாண சபை  தேர்தலில் பொதுஜன   பெரமுன   முன்னணியினர்   07  மகாணங்களிலும்    அமோக  வெற்றியினை  பெறுவோம்.     முன்னாள் வடக்கு முதல்வர்  சி.வி. விக்னேஷ்வரன்   மக்களின்  ஆதரவினை  பெற்று வெற்றி  பெறுவதற்கான   சாத்தியக்கூறுகள்  காணப்படுகின்றது  என   பாராளுமன்ற   உறுப்பினர்  ரோஹித  அபேகுணவர்தன  தெரிவித்தார். பொதுஜன  பெரமுன  முன்னணியின்  …

Read More »

அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் இ-ஹெல்த்கார்ட்!

நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் நடவடிக்கை அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.  களுத்துறை பெரியாஸ்பத்திரி மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏழுமாதங்களில் சகல மக்களுக்கும் இ-ஹெல்த்கார்ட்களை வழங்குவது இலக்காகும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் 71ஆ வது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது, இ-ஹெல்த்கார்ட்கள் …

Read More »

மிக முக்கியமான தேவையைப்பெற மங்கள தலைமையிலான குழு அமெரிக்கா விஜயம்

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் வொஷிங்டன் சென்றடைந்துள்ளனர்.  விரிவுபடுத்தப்பட்ட நிதி ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் …

Read More »

தமிழ் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும்!

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே அறிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின …

Read More »

ஜே.வி.பி.யினர் ஏற்படுத்திய அழிவுக்கு மன்னிப்புக் கோரவேண்டும் – ஜனநாயக இடதுசாரி முன்னணி

மாகாணசபை முறைமையை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது அதன் அதிகாரங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் இடம்பெறும்போது நாட்டில் அவர்கள் ஏற்படுத்திய அழிவுக்கு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் …

Read More »

மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். நாளையதினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே உத்தியோகபூர்வமாக வரவேற்பார். இதன்போது இரு நாட்டின் ஜனாதிபதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் …

Read More »

பாராளுமன்ற கைகலப்பு குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்க தீர்மானம்

கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள் மற்றும் மோதல்கள் குறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  மோதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.  கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட …

Read More »