நிலையவள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு நடவடிக்கை நிகழ்வொன்று இன்றைய தினம் யாழில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்  யாழ் மாவட்டச் செயலக முன்றலில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் பெண்களுக்கு எதிரான…
மேலும்

சப்ரகமுவ மாகாணத்தில் மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
மேலும்

சிறைச்சாலை பஸ் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இழப்பீடு

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அதிகாரிகள் இருவருக்கும் பதவி உயர்வுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி உயிரிழந்த எஸ்.ஆர். விஜேரத்த மற்றும்…
மேலும்

நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Posted by - March 1, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் டிப்லமோ சங்கம் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் இணைந்து தற்போதைய நிலையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் , இன்று மதியம் அவர்கள் ரத்மலானை நீர் வழங்கல்…
மேலும்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டம்

Posted by - March 1, 2017
வேலை வழங்குமாறு அரசை கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இன்று அவ்விடத்திற்கு சென்று பட்டதாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்களது கோரிக்கைகள் தொடர்பான பிரதியொன்று  அவரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது இது…
மேலும்

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

Posted by - March 1, 2017
உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி…
மேலும்

தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 1, 2017
தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நலக் குறைப்பாடு காரணமாக வடக்குமாகாண முதலமைச்சர் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தமக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான…
மேலும்

மத்தியவங்கி வர்த்தமானி விவகாரத்தின் சிக்கலுக்கு மஹிந்தவே காரணம்

Posted by - March 1, 2017
2015 ஆம் ஆண்டுக்குரிய முழு பிணைமுறிகளுக்குமான மத்தியவங்கியின் வர்த்தமானியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருந்தமையே சிக்கலுக்கு காரணமாகுமென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
மேலும்

தலவாக்கலை தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

Posted by - March 1, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சென்.கிளயார் தோட்ட கிளனமேரா பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தின் 30,000 ரூபா பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - March 1, 2017
நேற்று நடைபெற்ற திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் போது மண் அகழ்வு சம்பந்தமாக…
மேலும்