சிறைச்சாலை பஸ் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இழப்பீடு

339 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அதிகாரிகள் இருவருக்கும் பதவி உயர்வுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி உயிரிழந்த எஸ்.ஆர். விஜேரத்த மற்றும் எஸ். சன்னிகம் ஆகியோரின் உறவினர்களிடம் இழப்பீடு கையளிக்கப்படவுள்ளது.

மேலும் இவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவைக்கு யோசனையொன்றையும் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது