தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.உடல்நலக் குறைப்பாடு காரணமாக வடக்குமாகாண முதலமைச்சர் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தமக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தம்முடைய வீட்டில் தங்கியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனை தவிர பாரதூரமான நிலமைகள் எதுவும் இல்லை.
தாம் மிக விரைவில் தமது பணிகளுக்கு திரும்பவுள்ளதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

