சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கை நிகழ்வொன்று இன்றைய தினம் யாழில் நடைபெற்றது.குறித்த நிகழ்வானது இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலக முன்றலில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சார்ந்த விழிப்புணர்வு நாடக நிகழ்வு நடைபெற்றது.
மேலும் நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

