ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்

320 0

நேற்று நடைபெற்ற திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது மண் அகழ்வு சம்பந்தமாக பிரதியமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்தவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அது மோதல் நிலைமைக்கு சென்றது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் போது இந்திக அனுருத்த கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தியதால், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்