வேலை வழங்குமாறு அரசை கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இன்று அவ்விடத்திற்கு சென்று பட்டதாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்களது கோரிக்கைகள் தொடர்பான பிரதியொன்று அவரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையூடாக அரசின் உரிய தரப்பினருக்கு எடுத்துக் கூறி இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக தெரிவித்தார்.

