சிலாபம் – சவரான புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த நபர் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. சடலம் தற்போது சிலாப மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்ற நிலையில், அனைத்து மாகாண சபைகளினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத்…
அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்கள் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தியுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் தமன அம்பாறை மற்றும் தபகல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என…
கொட்டாஞ்சேனையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட அதே பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவானால் இந்த விளக்கமறியல் உத்தரவு நேற்று…
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் முதலானவற்றுக்கு தீர்வு கோரி கொழும்பு கோட்டையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏனைய தோழமை அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. சமத்துவ…
இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். ஐ நா மனித உரிமைப்பேரவையினால் எதிர்வரும் வாரம் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையில் சர்வதேச…
கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர், இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற போது நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி தர்மராஜா பாடசாலை மற்றும் கிங்ஸ்வுட் பாடசாலை என்பவற்றுக்கிடையில்…
கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையை கட்டி எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.