மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் பல கோரிக்கைகள்

332 0

வடமாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்ற நிலையில், அனைத்து மாகாண சபைகளினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என ஒரு மாகாண சபை உறுப்பினர் கூறியுள்ளார்.

ஆனால், மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே மாகாண சபையிலுள்ள தமிழர்களும் சிங்களவர்களும் கோருகின்றதாக பிரதமர் கூறியுள்ளார்.