கொட்டாஞ்சேனையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட அதே பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவானால் இந்த விளக்கமறியல் உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் மாணவர் ஒருவரை சேர்க்க, குறித்த பழைய மாணவர் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியர் ஒருவர் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

