அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நபர்கள் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தியுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் தமன அம்பாறை மற்றும் தபகல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

