நிலையவள்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில்

Posted by - March 31, 2017
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று 24 மணி நேர பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் ஒன்றியத்தின் செயலர் நிமல் சந்திரசிறி தெரிவித்திருந்தார். கடந்த வருடம் மார்ச்…
மேலும்

வடமாகாண சிறுவர் இல்லங்கள் உடனடியாக புதிய சட்டங்களின் கீழ் பதியப்படவேண்டும் -ஆணையாளர்

Posted by - March 31, 2017
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச் சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் என நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள வடமாகாண  ஆணையாளர் ரி. விஷ்பரூபன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் உள்ள…
மேலும்

யாழ் மணிக்கூட்டு கோபுர மணி ஒலியை யாழ் ஒலி யாக மாற்றித்தரிமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் கோரிக்கை

Posted by - March 31, 2017
யாழ் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகார மணி ஒலியை யாழ் இசைக்கருவியின் ஓசையாக மாற்றியமைத்து தருமாறு யாழை அன்பளிப்பு செய்த புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜியிடம் யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ. வாகீசனால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின்…
மேலும்

ஜெனீவாவில் நாட்டைத் தாரைவார்த்துள்ளது இந்த அரசாங்கம்- மஹிந்த சீற்றம்

Posted by - March 31, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டையும், இனத்தையும், எமது படையினரையும் தாரைவார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இராணுவம்…
மேலும்

அரசாங்கத்தின் கடந்த 2 வருட நடவடிக்கை திருப்தியில்லை -ஜாதிக ஹெல உறுமய கட்சி

Posted by - March 31, 2017
அரசியலமைப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.புதிய அரசியலமைப்புக்காக  நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வேறுவிதமான பதிவே உள்ளது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். குறைந்தபட்சம் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரையேனும்…
மேலும்

ஸ்கேனுக்குச் செல்லும் பெண்கள் அவதானம்

Posted by - March 31, 2017
சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ நிலையமொன்றில் ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை, நிருவானமான முறையில் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளரை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் “டெங்கு ஒழிப்பு” வேலைத்திட்டம்

Posted by - March 31, 2017
கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கெக்கிறாவ பொலிஸ் நிலையம், கெக்கிறாவ பொதுச் சுகாதார மையம், பிரதேச சபை,இணைந்து ஏற்பாடு செய்த “டெங்கு ஒழிப்பு” வேலைத்திடத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து சிரமதானத்தில் ஈடுபட்டது விஷேட அம்சமாகும்.அதிலும் குறிப்பாக கெக்கிறாவ நகர…
மேலும்

வௌ்ளை சீருடைக்கு பதிலாக மாணவர்களுக்கு மாற்று வர்ண சீருடை

Posted by - March 31, 2017
வெள்ளை நிற சீருடைக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு மாற்று வர்ணங்களில பாடசாலை சீருடையை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையேயான வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டடோர் போராட்டம் ​தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே மக்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். காணாமல் போனோர்…
மேலும்

மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும்- மாவை(காணொளி)

Posted by - March 30, 2017
மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா குறிப்பிட்டார். எமது முன்னைய அரசியல் தலைவர்கள் மதுபானம் மற்றும் புகைத்தலின் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலான வருமானம் கிடைப்பதை அறிந்து அடையாளமாக…
மேலும்