ஸ்கேனுக்குச் செல்லும் பெண்கள் அவதானம்

350 0

சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ நிலையமொன்றில் ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை, நிருவானமான முறையில் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளரை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கண்டி பிரதான மஜிஸ்ட்ரேட் இந்திக அத்தநாயக்க என்பவரே நேற்று (30) இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

கண்டி, வெவ்ரவும் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவ நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்பிடிய பிரதேசத்தில் வசிக்கும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளரே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் ஆவார். இவருடைய மனைவியும் இந்த மருத்துவ நிலையத்தில் சேவை புரிவதானகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய நோயாளி 45 வயதுடைய பெண் ஒருவராவார். குறித்த பெண்ணை தாதியொருவரின் உதவியின்றி, ஸ்கேன் அறையில் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.