நிலையவள்

இளஞ்செழியன் மீதான தாக்குதலின் பின்னால் இருக்கும் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - July 23, 2017
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது இன்றைய தினம் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாச்சூட்டுச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின்…
மேலும்

திபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட 9 mm கை துப்பாக்கியின் மகசீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Posted by - July 23, 2017
நீதிபதி  இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட 9 mm கை துப்பாக்கியின் மகசீன் நல்லை ஆதீன மண்டபத்திற்கு பின்னால் உள்ள  கழிவு நீர் காணிலிருந்து நேற்று   11மணியளவில்  பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து   விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் வீதியில்…
மேலும்

நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - July 23, 2017
நல்லூர் பிரதேசத்தில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனுக்கு கடந்த 18 வருடங்களாக நம்பிக்கைக்குரியவராக இருந்த குறித்த மெய்ப்பாதுகாவலரான, 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமரத்ன இன்று அதிகாலை 2…
மேலும்

இது நன்கு திட்டமிட்ட வகையில் அனுபவம் மிக்கவர்களால் தன்னை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலோ -இளம்செழியன் (காணொளி)

Posted by - July 22, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன், இன்று மாலை நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். நன்கு திட்டமிட்ட வகையில் அனுபவம் மிக்கவர்களால் தன்னை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலாகவே இது…
மேலும்

மாகாண சபைத் தேர்தலுக்கு ஒக்டோபர் 2 இல் வேட்பு மனு கோரப்படும்- மஹிந்த

Posted by - July 22, 2017
சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

சிறப்புற இடம்பெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள்

Posted by - July 22, 2017
95ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் சிறப்புற  இடம்பெற்றது. கூட்டுறவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த இந்நிகழ்வில் சிறப்புற செயற்ப்படும் சங்கங்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன இன் நிகழ்வின்போது வட…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 144 ஆவது நாளாகவும்…….

Posted by - July 22, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 144  ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த  தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும்…
மேலும்

விபத்துக்களற்ற மாகாணமாக வடமாகாணத்தைக் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - July 22, 2017
வடமாகணத்தில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் சம்மந்தமான முக்கியகூட்டம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 18.07.2017 செவ்வாய்க்கிழமையன்று பிற்ப்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார…
மேலும்

ஜனாதிபதி எமக்கு உடனடியாக பதில்தர வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

Posted by - July 22, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா?  இல்லையா?  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த…
மேலும்

கிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு

Posted by - July 22, 2017
தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமாா் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது…
மேலும்