இது நன்கு திட்டமிட்ட வகையில் அனுபவம் மிக்கவர்களால் தன்னை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலோ -இளம்செழியன் (காணொளி)

3471 33

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன், இன்று மாலை நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

நன்கு திட்டமிட்ட வகையில் அனுபவம் மிக்கவர்களால் தன்னை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலாகவே இது உள்ளதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக நடைபெறுகின்ற பாரதூரமான வழக்குகள் அனைத்தும் கையாளுகின்ற நீதிபதியாக தான் இருப்பதால், தன் உயிருக்கான அச்சுறுத்தல் நிலை இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் தெரிவித்தார்.

அத்துடன் தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸார் மீது முதலிலும் தொடர்ந்து தன்னை நோக்கியும் துப்பாக்கியால் சுட்ட நபர் துப்பாக்கியை இயக்கிய விதம் மிகவும் அனுபவம் மிகுந்தவர் இயக்கியதாக தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.

 

Leave a comment