நிலையவள்

இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.

Posted by - August 13, 2017
இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்.
மேலும்

காணிகள் விடுவிக்கப்படுவதன் அவசியம் குறித்து எதிர்கட்சித் தலைவர் கடிதம்

Posted by - August 13, 2017
கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படுவதன் அவசியம் குறித்து எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆயுத போராட்டம் நிறைவடைந்து 8 வருடங்கள் ஆகிய நிலையில், இந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த…
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வசதி!

Posted by - August 13, 2017
தற்போது நிலவும் கடும் வறட்சியினால் பாதிப்படைந்தவர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்க வர்த்தக வங்கிகளுக்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. வறட்சி காரணமாக பெரும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்த சலுகையுடனான கடன்,…
மேலும்

அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு!

Posted by - August 13, 2017
மதவாச்சி – தம்பலகொல்லேவ பகுதியில் ஆற்றின் அணைக்கட்டு ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டுள்ள நபரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள நபரின் கழுத்து பகுதியில் பல காயங்கள்…
மேலும்

இந்திய பிரஜைகள் மூவர் கைது!

Posted by - August 13, 2017
இரகசியமாக உடலில் தங்கத்தை மறைத்து, வெளிநாடு செல்ல முயற்சித்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 117 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய…
மேலும்

அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- தமிழீழ விடுதலை இயக்கம்(காணொளி)

Posted by - August 12, 2017
அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது. வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை…
மேலும்

யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டு விழா(காணொளி)

Posted by - August 12, 2017
யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சட்டபீட மாணவர்களின் சங்கத்தின் தலைவர் அ.ரொமல்சன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. வருடாத்த நீதம் நூல் வெளியீட்டு விழாக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி…
மேலும்

யாழில் மேசன் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

Posted by - August 12, 2017
மேசன் தொழிலுக்குப் பயிற்சி பெற்ற 400 பயிற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் இன்று சனிக்கிழமை (12.08) வழங்கி வைக்கப்பட்டன. இவ் உபகரணங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்…
மேலும்

வவுனியாவில் மாணவனுக்கு கத்திக்குத்து; வாளுடன் ஒருவர் கைது

Posted by - August 12, 2017
வவுனியா கேக்கவத்தை பகுதியிலிருந்து நேற்று மாலை வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேக்கவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் க. கனிஸ்டன் என்ற கம்மாலை (இரும்பு வேலை செய்யும் நிலையம்) வைத்துள்ள 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.…
மேலும்

அரசியலமைப்பை உருவாக்க அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு

Posted by - August 12, 2017
புதிய அரசியலமைப்பை வரையும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொட்னி பிரீலிங்குசென், ஹென்றி கியூலர் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
மேலும்