நிலையவள்

வடக்கு தொடரூந்து சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 23, 2017
பாலம் ஒன்றை சீரமமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து…
மேலும்

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது!

Posted by - October 23, 2017
மனைவிக்கு பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பில் வசிக்கும் 34 மூர்த்தி லோகேஸ்வரி என்ற பெண்ணை தொடர்ச்சியாக…
மேலும்

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலி

Posted by - October 23, 2017
இராஜகிரிய – களபலுவாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்த 83 வயதுடைய வயோதிப பெண்ணே…
மேலும்

பிரசன்ன சஞ்ஜீவ பிணையில் விடுதலை.!

Posted by - October 23, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவவை பிணையில் விடுவிக்க இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது வைத்தியசாலை வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்று…
மேலும்

திவுலபிட்டியவில் பதற்றம் : ஒருவர் பலி – 7 பேர் கைது

Posted by - October 23, 2017
திவுலபிட்டிய ஹென்பிட்டிகெதர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டொன்றும் மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, முன்னாள் பிரதேச சபை…
மேலும்

மாணவிகளை தொந்தரவு செய்த ஆசிரியருக்கு பிணை

Posted by - October 23, 2017
இளவயது பாடசாலை மாணவிகள் நால்வருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குறித்த ஆசிரியரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கெக்கிராவை மாவட்ட நீதிபதி…
மேலும்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிக்கு தாக்குதல் நடத்திய இருவர் விளக்கமறியலில்

Posted by - October 23, 2017
கொழும்பு மலலசேகர வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் குறித்த பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி…
மேலும்

சைட்டம் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் உண்ணாவிரதம் செய்வோம் – பெற்றோர்

Posted by - October 23, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான பிரச்சினைக்கான இறுதி தீர்மானம் இவ்வார இறுதியில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சைட்டம் தொடர்பிலான பிரச்சினைக்குச் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அதற்கு எதிராகச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச பல்கலைக்கழக மருத்துவ பீட…
மேலும்

ஐந்து புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Posted by - October 23, 2017
மூன்று புதிய தூதுவர்களும் இரண்டு உயர் ஸ்தானிகர்களும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (23) தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கனடா, ரஷ்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

ரயன் ஜயலத் பிணையில் விடுதலை

Posted by - October 23, 2017
வைத்திய பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்துக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள…
மேலும்