ரயன் ஜயலத் பிணையில் விடுதலை

401 0

வைத்திய பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்துக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் ரயன் ஜயலத் குடஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ரயன் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment