நிலையவள்

முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம்

Posted by - March 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…
மேலும்

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

Posted by - March 18, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர்…
மேலும்

பவுசர் மோதியதில் ஒருவர் பலி

Posted by - March 18, 2018
வத்தளை ஹெந்தலை – எலகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
மேலும்

அவசரகாலச் சட்டம் நீக்கம்

Posted by - March 18, 2018
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு …
மேலும்

புதிய தேசிய பாடசாலைகளை அமைக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை

Posted by - March 18, 2018
புதிய முறைமையிலான தேசிய பாடசாலை அமைப்பதற்கு தேவையான கொள்கைகளை வகுக்குமாறு அமைச்சரவை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது வரை நாட்டில் 353 தேசிய பாடசாலைகள் உள்ளன. மேலதிகமாக தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு தேவையான வரையறைகளை அறிவிக்குமாறே கல்வி அமைச்சுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் இன்று கட்சி உறுப்பினர்களுக்கு விசேட கூட்டம்

Posted by - March 18, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுடன் இன்று (18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு…
மேலும்

கட்சிக்குள் மாற்றம் வேண்டும்- ஜனாதிபதியிடம் ஸ்ரீ ல.சு.க. பிரபலங்கள் கோரிக்கை

Posted by - March 18, 2018
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்களை மாற்றம் செய்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான மானசீக பலத்தை ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீ ல.சு.க.யின் பிரபலங்கள் பலர்…
மேலும்

சிறைச்சாலை வைத்தியசாலை மூடல்

Posted by - March 18, 2018
சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்ட அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு கடந்த 15 ஆம் திகதி முதல் நோயாளர்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலை வைத்தியசாலைக்கு போதியளவு ஊழியர்கள் இன்மையே இதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது. எட்டு வைத்தியர்கள் தேவையான…
மேலும்

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - March 18, 2018
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில்  துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு  துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப்…
மேலும்

அரச வைத்தியசாலை நோயாளர்களுக்கு சிகிச்சையின் பின் ”பில்” – சுகாதார அமைச்சர்

Posted by - March 18, 2018
எதிர்வரும் நாட்களில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வெளியேறும் நோயாளர்களுக்கு பற்றுச் சீட்டொன்று வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அனுராதபுர அரச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்துப் பிரிவு என்பவற்றுக்கான கட்டிடத்துக்கு…
மேலும்