ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

6 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர் பெண்ணொருவரின் சடலம் ஆற்றில் கரையொதுங்கி உள்ளதைக் கண்டு கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள பெண் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய எஸ்.சுதர்சினி என்று அவரது கடவுச் சீட்டின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர் சவூதி அரேபியா நாட்டில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து நாடு திரும்பியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பிரயாண பை ஒன்றும், சமயலறை இலத்திரனியல் உபகரண பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட இரகசிய பொலிஸாரும், வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவும் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Related Post

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017 0
இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம், இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி…

A-9 வீதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து!!மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

Posted by - May 3, 2018 0
வவுனியா A-9 வீதியில்  இரு வேறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த…

யாழ்ப்பாணத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

Posted by - June 26, 2018 0
யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக…

முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்(காணொளி)

Posted by - April 4, 2017 0
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் தமது காணிகளை வடுவிக்குமாறு…

மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

Posted by - February 14, 2017 0
வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை…

Leave a comment

Your email address will not be published.