நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி பிரதேச மக்கள் இன்று வௌ்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்வுகளை காணும் வகையில் இருநாட்டு அரசாங்கமும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருதரப்பு பேச்சுவாரத்தைகளை மேற்கொள்ளவுள்ளன. இந்நிலையில் இலங்கை -இந்திய கடற்படையினரின் பிரத்தியேக பேச்சுவாரத்தை ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை சந்தியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவளார்களின் விளம்பர பலகை ஒன்று இனந்தெரியாதவர்களால்