அரச பாடசாலை மாணவர்களுக்கு வர்ணச் சீருடைகள்: கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்

356 0

மாணவர்களுக்கு வெள்ளை நிற சீருடைக்குப் பதிலாக வர்ண சீருடைகளை வழங்க கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாணவர்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த முடிவை தமது அமைச்சு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்காக நான்கு அல்லது ஐந்து நிறங்களை பாடசாலைகளுக்கு வழங்கி, நிர்வாகம் தெரிவுசெய்யும் நிறச் சீருடைகளை அவ்வப் பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் தாம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், இத்திட்டம் எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து அறியத் தரப்படவில்லை.