தகுதியற்றவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும்

341 0

தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தவறும் பட்சத்தில் அடுத்த வாரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறினார்.

இது தவிர கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவதை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள கொண்டுவர முடியும் என்று பூச்சியியல் விஞ்ஞான அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் விஞ்ஞான ஆய்வுகளின் மூலம், பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள நீர்களின் மூலம் நுளம்பு பரவியிருப்பதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன கூறினார்.