தென்னவள்

மத்தல விமானநிலையம் , அம்பாந்தோட்டை துறைமுகம் பெயர் மாற்றத்திற்கு ரணில் எதிர்ப்பு!

Posted by - July 22, 2016
மத்தல விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரினை நீக்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
மேலும்

இறுதிக் கட்ட யுத்தத்தில் ஐநா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை

Posted by - July 22, 2016
சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஐநா நடந்துகொண்ட விதம் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என ஜ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான முன்னணி வேட்பாளர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.வன்முறை, தீவிரவாதம் மற்றும் சர்வதேச பாதுகாப்பின்மை போன்ற அடிப்படைக் காரணங்களுக்கெதிராகப் போராடுவது போன்ற…
மேலும்

சீனி களஞ்சியசாலையில் 274 கிலோ கொகேயின் மீட்பு

Posted by - July 21, 2016
பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலையின் சீனி கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி கொகேயின் மீட்கப்பட்டுள்ளது.போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்தே மேற்படி  சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 
மேலும்

புறக்கோட்டை பகுதியில் பாரிய தீவிபத்து

Posted by - July 21, 2016
கொழும்பு புறக்கோட்டை ஹொல்கொட் மாவத்தை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வர்த்தக நிலையமொன்றிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மைத்திரியின் புதல்வர் தஹாம்க்கு எதிராக சதித்திட்டம்

Posted by - July 21, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை விமல்  வீரவன்ஸ தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றதற்கு பலி தீர்க்கும் வகையிலேயே ,  இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மேலும்

கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் பலி

Posted by - July 21, 2016
உக்ரைனின் தலைநகரில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பவெல் செரிமெட் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் 44 வயதானவர் என்பதுடன் அவர் சொந்த நாடு பெலரஸ் ஆகும். 
மேலும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ஊதிய உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - July 21, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 2500 ஊதிய உயர்வை வழங்குவதற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுக்கு நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சிக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

மைத்திரி – ரணில் அரசாங்கம் இன்னும் 5 வருடங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

Posted by - July 21, 2016
சிறீலங்காவின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து 2015ஆண்டு உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம்

Posted by - July 21, 2016
உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மின்னல் நிகழ்சித் தொகுப்பாளர் ஸ்ரீரங்கா கைதுசெய்யப்படலாம்

Posted by - July 21, 2016
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்காவைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அமைச்சர் ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஸ்ரீரங்காவினது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.
மேலும்