சீனி களஞ்சியசாலையில் 274 கிலோ கொகேயின் மீட்பு

316 0

Cocaine-haul-found-inside-container-in-Peliyagodaபேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலையின் சீனி கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி கொகேயின் மீட்கப்பட்டுள்ளது.போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்தே மேற்படி  சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். 

மீட்கப்பட்ட கொகேயின் பெறுமதி இதுவரை மதிப்பிடவில்லை என தெரிவிக்கும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இலங்கையில் மீட்கப்பட்ட அதிக தொகை கொகேயின் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் 80 கிலோ கொகேயின் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.