நிலையவள்

அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை தொடர்பில் மகிந்த ராஜபக்ச

Posted by - August 3, 2017
தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மகிந்தானந்த அலுத்கமகே…
மேலும்

புகையிரத நிலையங்களில் அனுமதியற்ற வியாபாரங்களைத் தடை செய்ய நடவடிக்கை

Posted by - August 3, 2017
புகையிரதம் மற்றும் புகையிரத நிலையங்களில் நடைபெறும் அனுமதியற்ற வியாபாரங்களை நிறுத்துவதற்குப் புகையிரத திணைக்களம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. அவ்வாறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகையிரத பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.…
மேலும்

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - August 3, 2017
பதுறலிய, மொரகஹகேன்வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட…
மேலும்

கோப்பாய் பருத்தித்துறையில் பகல்வேளையில் துணிகரத் திருட்டு

Posted by - August 3, 2017
கோப்பாய்  பருத்தித்துறைவீதி நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீடடில் நேற்றைய தினம் பகல்வேளையில் உள் நுழைந்த திருடர்கள் ஆசிரியரின் தாலிக்கொடி உட்பட 45 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் பூபாலசிங்கம் – வரதராயா என்பவரது வீட்டிலேயே நேற்றைய…
மேலும்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் இரகசிய கலந்துரையாடல்

Posted by - August 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து இயங்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் மூன்றும் நேற்றைய தினம் வவுனியாவில் ஓர் இரகசிய கலந்துரையாடலில் வவுனியா இந்துரன் விடுதியில் இடம்பெற்றது. ரெலோ , புளட் , ஈ.பி.ஆர்.எல்.எவ்…
மேலும்

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சவால் விடும் சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான சேவைக்காக எந்த  அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு சேவை மேற்கொண்டனர் என அந்த மாவட்டத்தில் பகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாராக உள்ளாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சவால்…
மேலும்

பிரதமரின் பாதுகாப்பு வாகனம் விபத்து: ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 3, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது…
மேலும்

வித்தியா கொலை வழக்கு; குறுக்கு விசாரணையின் போது அதிரடி கேள்வி

Posted by - August 3, 2017
வித்தியாவின் கொலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தினால் குற்றவாளிகளாக யாரையாவது காட்ட வேண்டிய தேவை இருந்ததால் குற்றச் செயல்களில் சம்பந்தப்படாதவர்களையும் எதிரிகளாக காட்டியுள்ளீர்கள் என எதிரி தரப்பு சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த…
மேலும்

கிளிநொச்சியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் விபத்து! வயோதிபப்பெண் மரணம்

Posted by - August 3, 2017
கிளிநொச்சி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இன்று முற்ப்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் வயோதிபப்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி  சேவையர்கடை சந்திக்கு அருகாமையில்  உள்ள கடை…
மேலும்

வடகொரியாவிற்கு எதிராக கண்டனம்: ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது

Posted by - August 3, 2017
வடகொரியாவிற்கு எதிராக கண்டனம் வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு…
மேலும்