கிளிநொச்சி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இன்று முற்ப்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் வயோதிபப்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி விட்டு சாரதி கடைக்கு சென்றுள்ளார்.
அதே திசையில் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மோதியதில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்த வயோதிபப்பெண் மயக்கமுற்றநிலையில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்த நிலையிலையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்ர்

