கவுடுல்லை தேசிய சரணாலயத்தில் யானைகளை பார்வையிடுவதற்காக உலங்கு வாநூர்தி மூலம் சிலர் வருகை தந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கவுடுல்லை தேசிய சரணாலய நிர்வாகமும், சிவில் வாநூர்தி சேவைகள் அதிகார சபையும் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று முன்தினம், கவுடுல்லை தேசிய சரணாலயத்தில் இருந்த யானைக் கூட்டம் ஒன்றை பார்வையிடுவதற்காக உலங்கு வாநூர்தி மூலம் அடையாளம் தெரியாதவர்கள் வருகை தந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் வந்த வாநூர்தி தாளப்பறந்து சென்றுள்ளது.
இதனை அடுத்து குழப்பம் அடைந்த யானைகள் சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

