புதுக்கடை நீதீமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் 12 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.
கொழும்பு நகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் , மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

