அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை – இந்தியா

16187 0

அணு ஆயுதமற்ற நாடாக அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என இந்தியா அறிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஆயுதங்கள் ஒழிப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமன்தீப் சிங் கில் இதனை அறிவித்துள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் உறுப்பினராக இல்லாதபோதும் அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா பின்பற்றி வருகிறது.

அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையிலும் இந்தியா உறுதியாக உள்ளது.

அத்துடன், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ள இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை என அமன்தீப் சிங் கில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அந்த ஒப்பந்தத்தின் அங்கமாக இந்தியா இருக்க இயலாது.

எனவே, இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment