கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களுடன் மஹிந்த நாளை முக்கிய சந்திப்பு

35808 0

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்துகொள்ளும் விசேட கலந்­து­ரை­யாடல் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை தங்­கா­லையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கார்டன் இல்­லத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தச் சந்­திப்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

ஜப்­பா­னுக்­கான விஜ­யத்தை அவ­ச­ர­மாக நிறைவு செய்­து­கொண்டு இன்று நாடு திரும்­ப­வுள்ள மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வர்­களை சந்­தித்து முக்­கிய விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் மீதான தொடர் அடக்­கு­மு­றைகள் மற்றும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் உள்­ளிட்ட அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகை­யி­லான வலு­வான கூட்­டணி அமைத்தல் என்­பன நாளைய சந்­திப்பின் முக்­கிய விட­யங்கள் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை நீதி­மன்ற தடையுத்­த­ரவை மீறி அம்­பாந்­தோட்­டையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்­டமை மற்றும் பொதுச் சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் கைது செய­்யப்­பட்­டுள்ள  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் திங்­கட்­கி­ழமை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள                                                                               னர்.

அம்­பாந்தோட்டை பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாமல் ராஜ­பக் ஷ, பிர­சன்ன ரண­வீர மற்றும் டி.வி. சானக உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தங்காலை சிறைச்சாலையில் விளக்கம றியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ உள்ளிட்டவர்களை மஹிந்த ராஜபக் ஷ சென்று சந்திக்க உள் ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment