வித்தியா படுகொலை வழக்கு – மரண தண்டனை கைதிகள் மேன்முறையீடு

22271 168

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அவர்கள் ஏழு பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.

சுவிஸ்குமார் மற்றும் அவரது சகோதரர் மஹாலிங்கம் சசீந்திரன் ஆகியோர், தங்களின் சட்டத்தரணி ஊடாக கடந்த 9ஆம் திகதியே மேன்முறையீடு செய்திருந்தனர்.

ஏனையோர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஊடாக மேன்முறையீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு ஆவணம் யாழ்ப்பாண மேல்நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment