மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு!

320 0

இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்​தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் பிற்போட்டுள்ளது. 

குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்த போதே பிற்போடப்பட்டது.

மனுவின் பிரதிவாதிகள் இரண்டு பேரின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் திருத்தங்களை சமர்பிக்க காலம் தேவை என்று பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவன சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறினார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 19ம் திகதி வழக்கை மீண்டும் எடுக்க தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியினால் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ட்ரசரிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதன்காரணமாக மத்திய வங்கியின் நடவடிக்கையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment