டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட காரணம் என்ன?- ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

551 0

டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து பலியாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவற்றின் மூலமாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களும் வேகமாக பரவும். இதை முன்கூட்டியே அறிந்து, கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

டெங்கு காய்ச்சல் குறித்து டாக்டர் சைலஜா கூறியதாவது:

“டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுகளில் டைப்-1, டைப்-2, டைப்-3, டைப்-4 என 4 வகைகள் உள்ளன. இதில் டைப்-2 வகை கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. டைப்-2 வகை கொசு கடித்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை, டைப்-4 வகை கொசு கடிக்கும்போது, உடலில் உள்ள டெங்கு வைரஸின் வீரியம் மேலும் அதிகமாகி விடுகிறது.

இதனால் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. ஜெர்மனியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியபோது, அந்நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பை தடுக்கலாம்

மேலும், ஜெர்மனில் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து உள்ளது. அவர்கள் இதை இப்போதும் பயன்படுத்துகின்றனர். மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுத்தால், அந்த மருந்தை வாங்கி நம் நாட்டில் பயன்படுத்தலாம். டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும்” என்றார்.

வேப்ப எண்ணெய் விளக்கு

சித்த மருத்துவர் தினகர், டெங்கு காய்ச்சல் குறித்து கூறியதாவது:

“வீட்டில் தினமும் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால், அதன் வாசனைக்கு கொசு வீட்டுக்குள் வராது. மேலும், வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் கொசு கடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் வேப்ப எண்ணெய் கிடைக்கும்” என்றார்.

Leave a comment