ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டிகிரிப் முல்லைத்தீவிற்கு விஜயம் (கானொளி)

1114 0

முல்லைத்தீவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த, ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளார்.

இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்த அவர், முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்காக பங்குத்தந்தை ஒருவரால் அமைக்கப்பட்டு நீதிமன்றினால் இடைநிறுத்தப்பட்ட பொது நினைவிடத்தை பார்வையிட்டார்.

குறித்த நினைவிடம் அமைப்பதற்கு கடந்த மே மாதம் மாவட்ட நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டநிலையில் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 387 ஏக்கார் காணி உள்ளடங்கலான 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதியிடம் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இறுதி போர் இடம்பெற்ற பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்ற ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி நிலமைகளை பார்வையிட்டுள்ளார்.

Leave a comment