ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அழைப்பாணை

227 0

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை புவனேக அலுவிகார உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோர் மூலம் முன்வைக்கப்பட்டிருந்த மனு ஒன்றை பரிசீலனை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கடந்த 21ம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டதாகவும், பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொதுமக்கள் நீதி தொடர்பில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைப்பதாகவும், அதன் காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனு பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு அழைப்பாணை வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment