மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தொடர்பில் நேற்றையதினம் அமைச்சரவையில் கடுமையான கருத்துமோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு இடையில் இந்த கருத்துமோதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நெடுஞ்சாலையின் பொத்துஹெரவில் இருந்து கண்டி வரையிலான பாதை நிர்மாணத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாக அமைச்சர் தயாசிறி குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து இடம்பெற்ற கடுமையான கருத்து மோதல்களில் ஏனைய அமைச்சர்களும் தலையிட்டனர்.
இந்த நிலையில் குறித்த பாதை தொடர்பில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அது தொடர்பில் அறிக்கை ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

